Advertisement

SA vs IND: இமாலய மைல் கல்லை நோக்கி விராட் கோலி!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி 199 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் 8000 டெஸ்ட் ரன்களைக் கடக்கவுள்ளார்.

Advertisement
SA vs IND: Virat Kohli set to become 6th Indian batsman to 8000 Test runs
SA vs IND: Virat Kohli set to become 6th Indian batsman to 8000 Test runs (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 24, 2021 • 11:08 AM

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
December 24, 2021 • 11:08 AM

இதில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் செஞ்சூரியனில் தொடங்குகிறது.

Trending

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான விராட் கோலி 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,801 ரன்கள் அடித்துள்ளார்.  தற்போது வரை 27 சதங்கள், 27 அரை சதங்கள் அவர் அடித்துள்ளார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடரில் 199 ரன்கள் அடித்தால் 8,000 ரன்கள் எடுத்த 6ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைக்க இருக்கிறார்.

இதுவரை சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் சேவாக் ஆகியோர் முதல் ஐந்து இடத்தில் உள்ளனர்.

27 சதம் அடித்துள்ள விராட் கோலி மேலும் ஒரு சதம் அடித்தால் ஸ்டீவ் ஸ்மித், ஆலன் பார்டர், கிரீம் ஸ்மித் ஆகியோரை பின்னுக்குத் தள்ளுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement