
SA vs IND: Virat Kohli Sits Out Due To Injury (Image Source: Google)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று துவங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் டாஸ் போட மைதானத்திற்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனெனில் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வராமல் ராகுல் களத்திற்கு வந்ததால் என்ன ஆனது? என்று தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு டாசிற்கு பிறகுதான் விராட் கோலி அணியில் இல்லை என்பது புரிந்தது.
மேலும் இந்திய அணியின் கேப்டனாக இந்த போட்டியில் ராகுல் முதன்முறையாக களமிறங்கினார். டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்றும் அறிவித்தார். அதன்படி டாஸுக்கு பிறகு இந்திய அணியில் உள்ள மாற்றம் குறித்தும், விராட்கோலி ஏன் விளையாடவில்லை என்பது குறித்தும் ராகுல் தனது தெளிவான விளக்கத்தை அளித்திருந்தார்.