
SA vs IND: Will Ashwin get the post of vice-captain? (Image Source: Google)
இந்திய அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டன் ரோஹித் சர்மா காயத்தால் விலகியதால், புதிய துணை கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வரும் ஒரே சுழற்பந்து வீரர் அஸ்வின் தான்.