
New Zealand vs South Africa ODI Dream11 Prediction: ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தயாராகும் வகையில் பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளன. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இத்தொடரின் இரண்டாவது போட்டியானது நாளை (பிப்ரவரி 10) தொடங்கவுள்ளது.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அபாரமான வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. அதேசமயம் தென் ஆப்பிரிக்க அணியும் சமீப காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
NZ vs SA ODI Tri-Series: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து
- இடம் - கடாஃபி கிரிக்கெட் மைதானம், லாகூர்
- நேரம் - பிப்ரவரி 10, மதியம் 2.30 மணி (இந்திய நேரப்படி)