
SA vs PAK : South Africa won the toss and choose to bowl first (Image Source: Google)
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று தொடரை சமன்செய்துள்ளது.
இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று செஞ்சுரியனில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
தென்ஆப்பிரிக்க அணியில் அனுபவ வீரர்களான குயின்டன் டி காக், டேவிட் மில்லர், காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா திரும்பியுள்ளதால், ஹென்ட்ரிச் கிளாசென், ஜேஜே ஸ்மட்ஸ், கேசவ் மகாராஜ், சிம்பாலா ஆகியோருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.