
இலங்கை அணி தற்சமயம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி (நவம்பர் 27) டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 9 ரன்னிலும், டோனி டி ஸோர்ஸி 4 ரன்னிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 16 ரன்களூக்கும், டேவிட் பெட்டிங்ஹாம் 4 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் கைல் வெர்ரையன் 9 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வியான் முல்டர், மார்கோ ஜான்சென், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மஹாராஜ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதற்கிடையில் டெம்பா பாவுமா தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில் 70 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய் அசிதா ஃபெர்னாண்டோ மற்றும் லஹிரு குமாரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு அரம்பமே அதிர்ச்சி காத்திருந்த்து. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், கேப்டன் தனஞ்செயா டி சில்வா உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப் ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.