
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதில். இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதன்படி போலண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ரீஸா ஹென்றிக்ஸ் 8 ரன்களிலும், கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 10 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய லூயிஸ் டு ப்ளூய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் அடித்து அசத்தினார்.
ஆனால் அவருக்கு துணையாக விளையாடிய மேட்சன் ரன்கள் ஏதுமின்றியும், மொயீன் அலி 18 ரன்களிலும், ஃபெரீரா 5 ரன்களிலும், ரோமாரியோ செப்ஃபெர்ட் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழக்க, மறுப்பக்கம் சிறப்பான ஆட்டத்தை வெலிப்படுத்திய டூ ப்ளூயும் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 71 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ராயல்ஸ் அணி தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.