
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 21ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஈஸ்டர்ன் கேப் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. இதில் ஆடம் ரோஸிங்டன், ஜோர்டன் ஹெர்மன் ஆகியோர் தலா 4 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜேஜே ஸ்மட்ஸ் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
ஆனால் மறுமுனையில் களமிறங்கிய ஐடன் மார்க்ரம் 15, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மட்ஸ் அரைசதம் கடந்தார். பின் 65 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.