
தென் ஆப்பிரிக்கவின் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்ஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
அதன்படி களமிறங்கிய பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிலிப் சால்ட் - குசால் மெண்டிஸ் இணை அதிரடியான தொடக்கத்தை தந்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இதில் 21 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களைச் சேர்த்திருந்த பிலிப் சால்ட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்து அசத்தினார்.