
SA20 League: Sunrisers Eastern Cape restricted Paarl Royals by 127 runs (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார். அதன்படி களமிறங்கிய பார்ல் ராயல்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர்கள் ஜேசன் ராய் 6, ஜோஸ் பட்லர் 12 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த விஹான் லூப் - கார்பின் போஷ் ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். பின் 20 ரன்களில் போஷ் ஆட்டமிழக்க, 28 ரன்களைச் சேர்த்திருந்த லூப் விக்கெட்டை இழந்தார்.