SA20 League: தோல்விடைந்தும் அரையிறுதிக்கு முன்னேறியது பார்ல் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேப்பிட்டள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதையடுத்து 4ஆவது இடத்திற்கான போட்டியில் நேற்று பார்ல் ராயல்ஸ் அணி, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.
ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி நம்பர் 1 இடத்தில் உள்ள நிலையில், அந்த அணி நேரடியாகவே அரையிறுதிக்கு சென்று விட்டது. ஆனால், 4ஆவது இடத்தில் உள்ள பார்ல் ராயல்ஸ் அணி இப்போட்டியில் வெற்றி அல்லது 60 க்கும் குறைவான ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் மட்டுமே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற சூழலில் களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற பார்ல் ராயல்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
Trending
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில், வெற்றியை மனதில் வைத்து அபாரமாக பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் குசால் மெண்டிஸ் மற்றும் ஃபிலிப் சால்ட் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 5.2 ஓவரில் 69 ரன்களை சேர்த்தனர். ஃபிலிப் சால்ட் 21 பந்தில் 39 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த குசால் மெண்டிஸ், காட்டடி அடித்து 41 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்தார்.
காலின் இங்ராம் அதிரடியாக ஆடி 21 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ரன்களும், ஜிம்மி நீஷம் 11 பந்தில் 22 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 226 ரன்களை குவித்த பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி அணி, 227 ரன்கள் என்ற கடின இலக்கை பார்ல் ராயல்ஸுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய பார்ல் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 70 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக பார்ல் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை எழுவியது. இருந்தாலும், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள பார்ல் ராயல்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு சென்றது.
இன்று நடக்கும் முதல் அரையிறுதிப் போட்டியில் மீண்டும் பார்ல் ராயல்ஸ் அணியும், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. நாளை நடக்கும் 2ஆவது அரையிறுதிப் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியும் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து வரும் 11 ஆம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now