
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தி வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள எஸ்ஏ20 லீக் தொடரானது மூன்றாவது சீசனுக்காக தற்போதில் இருந்தே தயாராகி வருகிறது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டின. இந்நிலையில் எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தக்கவைத்த, ஒப்பந்தம் செய்த மற்றும் அணியில் இருந்து வெளியேற்றிய வீரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளன. அதனை இப்பதிவில் பார்ப்போம்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
- தக்கவைத்த வீரர்கள்: நூர் அகமது, மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஜூனியர் டாலா, குயின்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், வியான் முல்டர், நவீன்-உல்-ஹக், பிரைஸ் பார்சன்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், ஜேசன் ஸ்மித், ஜான்-ஜான் ஸ்மட்ஸ், ப்ரீனெலன் சுப்ரயன்.
- புதிதாக வாங்கிய வீரர்கள்: பிராண்டன் கிங், கேன் வில்லியம்சன், கிறிஸ் வோக்ஸ், மார்கஸ் ஸ்டொய்னிஸ்
- விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கைல் மேயர்ஸ், கீமோ பால், ரீஸ் டாப்லி, பானுகா ராஜபக்சே, டோனி டி சோர்ஜி, நிக்கோலஸ் பூரன், ரிச்சர்ட் க்ளீசன், ஆஷ்டன் அகர்.