
இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் கேப்டன்சியில் இருந்து வெளியேறிய விராட் கோலி திடீரென டெஸ்ட் கேப்டன்சியில் இருந்தும் விலகினார். அவரின் இந்த திடீர் விலகலால் அடுத்த கேப்டனாக யாரை நியமிப்பது என்று புரியாமல் பிசிசிஐ உள்ளது.
ரோஹித் சர்மவை டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்துள்ளனர். ஆனால் டெஸ்ட் அணிக்கு கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களை கேப்டனாக நியமித்தால் தான் எதிர்காலத்திற்கு உதவும் என முன்னாள் வீரர்கள் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அனுபவத்தின்படி ரோஹித்தை விட்டால் வேறு வழி இல்லை என்பது போல பிசிசிஐ உள்ளது.
இந்நிலையில் பிசிசிஐக்கு முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாபா கரீம் எச்சரித்துள்ளார். அதில், ரோஹித்தை 3வடிவ அணிக்கும் கேப்டனாக நியமித்தாலும் கூட அது நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மிக முக்கியமாகும். 50 ஓவர் உலகக்கோப்பை வரவுள்ளது. அதே ஆண்டில் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் வரும். எனவே இதனை முதலில் பிசிசிஐ புரிந்துக்கொள்ள வேண்டும்.