மைதானத்தில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்!
மும்பை - பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மைதானத்திலேயே கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 50ஆவது பிறந்த நாள் இரண்டு நாட்கள் முன்பே கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் நடுவே நடைபெற்றது. இந்த போட்டி மும்பையின் ஹோம் கிரவுண்ட்-ஆன வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.
இன்றைய மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் டக் அவுட்-இல் சச்சின் டெண்டுல்கர் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். 50 வயதை கடக்க இருக்கும் சச்சின் டெண்டுல்கர், இது எனது மிகவும் குறைவான அரைசதம் என்று தெரிவித்தார்.
Trending
சச்சின் டெண்டுல்கர் கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் இந்த கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சச்சின் டெண்டுல்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மைதானத்தில் கூடியிருந்த சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிக ரசிகர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் முகம் அடங்கிய முகக்கவசம் வழங்கப்பட்டு இருந்தது.
Sachin Tendulkar's birthday celebration at the Wankhede Stadium. pic.twitter.com/75IvKmITFG
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 22, 2023
இந்திய கிரிகெட் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது சச்சின் டெண்டுல்கர் அணிந்த ஜெர்சி எண் 10 ஆகும். இன்றைய போட்டியின் போது பஞ்சாப் கிங்ஸ் 10 ஆவது ஓவரில் விளையாடி கொண்டிருந்த போது மைதானத்தில் 'சச்சின்... சச்சின்' என்ற கோஷம் எழுப்பப்பட்டது. மேலும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக மைதானத்தின் வெளியில் சச்சின் டெண்டுல்கரின் எண் 10 ஜெர்சியின் மிகப்பெரிய மாதிரி வைக்கப்பட்டு இருந்தது.
Win Big, Make Your Cricket Tales Now