
ஐபிஎல் 15ஆவது சீசனில் இந்திய ஃபாஸ்ட் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். பும்ரா, ஷமி, ஹர்ஷல் படேல், உமேஷ் யாதவ் ஆகிய சீனியர் பவுலர்களுடன், இளம் பவுலர்களான உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், முகேஷ் சௌத்ரி, அர்ஷ்தீப் சிங், சிமர்ஜீத் சிங் ஆகிய இளம் பவுலர்கள் அருமையாக பந்துவீசிவருகின்றனர்.
இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க ஃபாஸ்ட் பவுலர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், ஆர்சிபி அணியில் ஆடிவரும் ஹர்ஷல் படேலை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்துள்ளார். கடந்த சீசனில் ஆர்சிபிக்காக அபாரமாக பந்துவீசி கடந்த சீசனில் அதிகமான விக்கெட்டுகளை(32 விக்கெட்) வீழ்த்திய ஹர்ஷல் படேலை, இந்த சீசனுக்கான ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்சிபிஅணி. கடந்த சீசனில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.