விராட் கோலியின் பரிசு குறித்து சச்சின் டெண்டுல்கர் உருக்கம்!
உலகின் முகச்சிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் 2013ஆம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். இந்த நிலையில் அவர் தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ஓய்வுபெற்ற அன்று எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. நான் வீரர்களுக்கான அறைக்கு திரும்பியுடன் கண்ணீருடன் இருந்தேன். இனி இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் களம் இறங்க முடியாது என்று ஒரு ஓரத்தில் தனியாக தலையில் டவலுடன் அமர்ந்து கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தேன்.
உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டு என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த நேரத்தில் விராட் கோலி என்னிடம் வந்தார். அவர் தனது தந்தை கொடுத்த புனித கயிறு ஒன்றை என்னிடம் கொடுத்தார். அவர் கொடுத்த பரிசு விலை மதிப்பற்றது” என்று தெரிவித்துள்ளார்.
Trending
2011ஆம் ஆண்டு எம் எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை கைப்பற்றியது. அப்போது முதல் முறையாக கோப்பையை கைப்பற்றிய டெண்டுல்கருக்காக அவரை தோளில் சுமந்து மைதானம் முழுவதும் வலம் வந்தனர். விராட் கோலியும் அவரை தோளில் சுமந்து சென்றார்.
அப்போது கோலி கூறும்போது, ‘தெண்டுல்கர் 23 ஆண்டுகளாக தேசத்தின் பாரத்தை சுமந்துள்ளார். நாங்கள் அவரை தோளில் சுமக்கும் நேரம் இது’என்று குறிப்பிட்டு இருந்தார்.
Win Big, Make Your Cricket Tales Now