Advertisement

ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனையும் சாய் சுதர்சன்!

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசிய சாய் சுதர்சன் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் பதிவிட்ட ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement
Sachin Tendulkar Shared Special Tweet For Sai Sudarshan After His 96 Runs Match Winning Knock Agains
Sachin Tendulkar Shared Special Tweet For Sai Sudarshan After His 96 Runs Match Winning Knock Agains (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 29, 2023 • 11:26 PM

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும், நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
May 29, 2023 • 11:26 PM

அதன்படி களமிறங்கிய குஜராத்தின் தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆரம்பித்தனர். சிஎஸ்கே வீரர்கள் பல கேட்ச்களை பிடிக்க தவறி விட்டனர். பின் 39 ரன்களை எடுத்திருந்த ஷுப்மன் கில் தோனியிடன் ஸ்டம்பிங் ஆனார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் சாஹாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சாஹா 54 ரன்களில் தோனியிடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

Trending

அதேசமயம் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி பதிரனா ஓவரில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் பாண்டியாவும் அதிரடியாக 21 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 214/4  ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே சார்பாக தீபக் சஹார், ஜடேஜா, தலா 1 விக்கெட்டுகளையும் பதிரனா 2 விக்கெட்டுகளையும்  எடுத்தனர். 

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியார் சாய் சுதர்சன் ஆட்டத்தை ட்விட்டரில் பாராட்டியுள்ளார். 

இதுகுறுத் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பதிவில், இன்றிரவு என் கண்களுக்கு நல்ல விருந்தளித்தார் சாய் சுதர்சன். நன்றாக விளையாடினார் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார்.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement