
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் நெற்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடின்னார். சர்வதேச கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் விளையாடி, 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டி என மொத்தம் 667 சர்வதேச போட்டிகளில் விளையாடி 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர். இந்நிலையில் அவரை கவுரவிக்கும் விதமாக ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தின் ஸ்டாண்டிற்கு சச்சின் டெண்டுல்கரின் பெயரை சூட்டியுள்ளது ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்.
அவரது 50-வது பிறந்த நாளன்று இந்த கவுரவத்தை அவருக்கு வழங்கி உள்ளது ஷார்ஜா கிரிக்கெட் மைதான நிர்வாகம். அதோடு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் பதிவு செய்த அந்த இரண்டு சதங்களின் 25ஆவது ஆண்டு கொண்டாட்டமாகவும் இது அமைந்துள்ளது.