Advertisement

டிஎன்பில் 2023: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 174 டார்கெட்!

திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 174 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
Sai Kishore and Vijay Shankar help IDream Tiruppur Tamizhans to put up a total of 173/5 in the first
Sai Kishore and Vijay Shankar help IDream Tiruppur Tamizhans to put up a total of 173/5 in the first (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 28, 2023 • 10:19 PM

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 20ஆவது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ர திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
June 28, 2023 • 10:19 PM

அதன்படி களமிறங்கிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் - துஷார் ரஹேஜா இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ராதா கிருஷ்ணன் 10 ரன்களில் ஆட்டமிழக்க, துஷார் ரஹேஜா 30 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

Trending

இதையடுத்து ஜோடி சேர்ந்த சாய் கிஷொர் - விஜய் சங்கர் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அண்யின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சாய் கிஷோர் 45 ரன்களிலும், விஜய் சங்கர் 43 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.

இறுதியில் அனிருத் - விவேக் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. திண்டுக்கல் அணி தரப்பில் சரவண குமார், அவுசிக் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.  

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement