
டேவிட் வார்னரின் பவுண்டரி சாதனையை சமன்செய்த சாய் சுதர்ஷன்! (Image Source: Google)
18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று முல்லன்பூரில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸை வீழ்த்து இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
அதேசமயம் இப்போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவினாலும் அந்த அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் அரைசதம் கடந்ததுடன் 10 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 80 ரன்களை சேர்த்து அசத்தினார். மேற்கொண்டு இப்போட்டியின் மூலம் சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
ஒரு சீசனில் அதிக பவுண்டரிகள்