Advertisement

ஐபிஎல் 2023: இறுதிப்போட்டியில் அதிரடி காட்டி சாதனைப்பட்டியளில் இடம்பிடித்த சாய் சுதர்ஷன்!

சிஎஸ்கே அணிக்கெதிரான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 96 ரன்கள் அடித்த சாய் சுதர்ஷன் சில சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan May 29, 2023 • 23:01 PM
Sai Sudharsan scripts a massive IPL record after sensational knock against Chennai Super Kings
Sai Sudharsan scripts a massive IPL record after sensational knock against Chennai Super Kings (Image Source: Google)
Advertisement

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதி வருகின்றன. இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக் தீர்மானித்து. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு சகா 54 ரன்கள் மற்றும் கில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் 3ஆவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் முதலில் நிதானமாக விளையாடி 33 பந்துகளில் அரைசதம் அடித்தபின் தனது கியரை மாற்றி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தீக்சனா, துஷார் தேஷ்பாண்டே மற்றும் பதிரனா ஆகியோரின் ஓவர்களில் நிறுத்தாமல் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசி அடுத்த 14 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க, 47 பந்துகளில் 96 ரன்கள் அடித்து போட்டியின் கடைசி ஓவரில் அவுட்டானார். 

Trending


இதன் மூலம் 4 ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இவரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் 96 ரன்கள் அடித்ததன் மூலம் சாய் சுதர்சன் பல்வேறு சாதனைகள் பட்டியலில் இடம்பிடித்தார். 

ஐபிஎல் ஃபைனலில் 50+ ஸ்கொர் அடித்த இளம் வீரர்கள்

  •     20 வயது, 318 நாட்கள் – மனன் வோஹ்ரா(பஞ்சாப்) vs கொல்கத்தா, பெங்களூரு, 2014 .
  •     21 வயது, 226 நாட்கள் – சாய் சுதர்சன்(குஜராத்) vs சிஎஸ்கே, அகமதாபாத், 2023.
  •     22 வயது, 37 நாட்கள் – சுப்மேன் கில்(கொல்கத்தா) vs சிஎஸ்கே, துபாய், 2021.
  •     23 ஆண்டுகள், 37 நாட்கள் – ரிஷப் பண்ட்(டெல்லி) vs மும்பை, துபாய், 2020.

ஐபிஎல் ஃபைனலில் அடிக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கொர்

  •     117* – ஷேன் வாட்சன் (சிஎஸ்கே) vs ஹைதராபாத், மும்பை வான்கடே, 2018
  •     115* – விருத்திமான் சாஹா (பஞ்சாப்) vs கொல்கத்தா, பெங்களூரு, 2014.
  •     96 – சாய் சுதர்சன் (குஜராத்) vs சிஎஸ்கே, அகமதாபாத், 2023
  •     95 முரளி விஜய் (சிஎஸ்கே) vs பெங்களூரு, சென்னை, 2011
  •     94 – மணீஷ் பாண்டே (கொல்கத்தா) vs பஞ்சாப், பெங்களூரு, 2014.

சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத வீரர் ஐபிஎல் பிளே-ஆப் சுற்றில் அடித்த அதிகபட்ச ஸ்கொர்

  •     112* – ரஜத் படிதார் (ஆர்சிபி) vs லக்னோ, கொல்கத்தா, 2022 எலிமினேட்டர்
  •     96 – சாய் சுதர்சன் (குஜராத்) vs சிஎஸ்கே, அகமதாபாத், 2023 ஃபைனல்
  •     94 – மணீஷ் பாண்டே (கொல்கத்தா) vs ஆர்சிபி, பெங்களூரு, 2014 ஃபைனல்
  •     89 – மன்விந்தர் பிஸ்லா (கொல்கத்தா) vs சிஎஸ்கே, சென்னை, 2012 ஃபைனல்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement