
கடந்த ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான் அடெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரர் சைம் அயூம் ஃபீல்டிங்கின் போது காயமடைந்து களத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். மேற்கொண்டு அவரது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டதன் காரணமாக போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேறியதுடன் தொடரிலும் இருந்தும் விலகினார்.
மேற்கொண்டு அவரின் மருத்துவ சிகிச்சையின் காரணமாக லண்டன் சென்றுள்ளார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்தும் அவர் விலகினார். இந்நிலையில் அவரின் உடற்தகுதி குறித்த அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மேலும் பிசிபியின் அறிக்கையில், சைம் அயூப் குணமடைய குறந்தது 10 வார காலம் ஆகும் என்ற அறிவிப்பையும் கொடுத்துள்ளது.
இதுகுறித்து பிசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகளின் முடிவு மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி சைம் அயூப் தனது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். மேலும் அவர் தனது காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய 10 வாரங்கள் தேவைப்படும். இதனால் உடற்தகுதி மற்றும் மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் விளையாடுவது உறுதிசெய்யப்படும்” என்று தெரிவித்துள்ளது.