
சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். தலை சிறந்த 3 வீரர்களாக பார்க்கப்படும் இந்த மூன்று வீரர்களும் கடந்த 10 ஆண்டுகளாகவே அந்தந்த நாட்டு அணிகளுக்கான கேப்டனாகவும், ஒரு பேட்ஸ்மேனாகவும் தங்களது அணியை சிறப்பாக வழிநடத்திக் கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியில் கேப்டன் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தாலும், 2019ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பை, 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை.
இருப்பினும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. இந்நிலையில் விராட் கோலியை விட மூன்று வகையான கிரிக்கெட்க்கும் சிறந்த கேப்டன் யார் ? என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான சல்மான் பட் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.