
Sandeep Lamichhane To Lead Nepal After Gyanendra Malla Stripped Off Captaincy Over Disciplinary Issu (Image Source: Google)
நெபாள் கிரிக்கெட் அணியில் நட்சத்திர் சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லமிச்சானே. ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடிய இவர், தனது அபார பந்துவீச்சின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.
இதைதவித்து பிக் பேஷ், சர்வதேச டி20 அன அனைத்து வகையிலும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, அணியில் தவிர்க்க முடியாத வீரராக வலம்வருகிறார்.
இந்நிலையில் கேப்டன் ஞானேந்திரா மல்லா மற்றும் துணை கேப்டன் திபேந்திர சிங் ஐரி ஆகியோரின் ஒழுக்காற்றுப் பிரச்சினைகள் காரணமாக அவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு, அதற்கு பதிலாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சந்தீப் லாமிச்சானே புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.