சந்தீப் சர்மாவின் அசத்தலான யார்க்கரில் க்ளீன் போல்டான கிளாசென் - வரைலாகும் காணொளி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது.
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தன் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 12 ரன்களை எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி 15 பந்துகளில் 37 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஐடன் மார்க்ரமும் ஒரு ரன்னுடன் பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். அதன்பின் டிராஸ்விஸ் ஹெட் 34 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி, அப்துல் சமத் ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரிச் கிளாசென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த கையோடு பெவிலியன் திரும்பினார். இடஹ்னால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய டிரென்ட் போல்ட் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சந்தீப் கிஷன் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
SANDEEP SHARMA, came as a replacement & moved to the most trusted Rajasthan bowler. pic.twitter.com/LecRqqilaN
— Johns. (@CricCrazyJohns) May 24, 2024
இந்நிலையில் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹென்ரிச் கிளாசென் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்களை எட்டியிருந்த நிலையில், இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ராஜஸ்தான் அணி வீரர் சந்தீப் சர்மா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை சந்தீப் சர்மா யார்க்கராக வீச அதனை சற்றும் எதிர்பாராத ஹென்ரிச் கிளாசென் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now