Advertisement

விராட் கோலி நிச்சயம் இதனை செய்ய வேண்டும் - சஞ்சய் பங்கார்!

விராட் கோலியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டிய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கார், அதை சரி செய்வதற்கான தீர்வையும் கூறியுள்ளார்.

Advertisement
Sanjay Bangar Explains Why Virat Kohli Needs To Develop
Sanjay Bangar Explains Why Virat Kohli Needs To Develop "Response Off The Back Foot" (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 27, 2021 • 06:26 PM

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (26ஆம் தேதி) தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 27, 2021 • 06:26 PM

இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்துள்ளது. ராகுல் 122 ரன்களுடனும், ரஹானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 2ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டது.

Trending

சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலி, அண்மைக்காலமாக பெரிய ஸ்கோர் செய்யமுடியாமல் தடுமாறிவருகிறார். அந்தவகையில், அவருக்கு இந்த தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆனால் செஞ்சூரியனில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸிலும் 35 ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே சென்ற பந்தை அடிக்கமுயன்று, ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கோலி.

இந்நிலையில், விராட் கோலியின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டி அதற்கான தீர்வையும் கூறியுள்ளார் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார்.

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் பங்கார், “விராட் கோலி அதிகமாக டிரைவ் ஷாட்டையே சார்ந்திருக்கிறார். பந்து நல்ல வேகமாக வரும் சீமிங் கண்டிஷனில் நல்ல ஃப்ளோவுக்கு வர கூடுதலாக ஒரு ஆட்டம் தேவை. ஆனால் கோலி அதிகமாக ஃப்ரண்ட் ஃபூட் ஷாட்டையே சார்ந்து இருக்கிறார். 

அது தொடர்ந்தால், அவருக்கு எதிராக தென் ஆப்பிரிக்க பவுலர்களின் திட்டம் எளிதாகும். பந்தை வைடாக வீசி கோலியை வீழ்த்த முயற்சிப்பார்கள். எனவே ஃப்ரண்ட் ஃபூட் ஷாட்டுகளையே அதிகம் சார்ந்திருக்காமல், விராட் கோலி பேக் ஃபூட் ஷாட்டுகளை வளர்த்துக்கொள்வது நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement