இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 10ஆம் தேதி மான்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஏனெனில் இந்திய அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக அணியின் மூத்த வீரரான துணை கேப்டன் ரஹானே மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஹானேவுக்கு அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அது அவருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் என்றுதான் கூறவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.