
ஆசிய கோப்பை 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்! (Image Source: Google)
இந்திய அணி தற்பொழுது இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முன்பாக மற்ற வடிவிலான கிரிக்கெட் தொடர்களை எல்லாம் முடித்துக் கொண்டு இருக்கிறது. பும்ரா தலைமையில் அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்திருக்கிறது.
இதற்கு அடுத்து இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஆசியக் கோப்பை தொடரையும், உள்நாட்டில் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பைக்கு முன்பாக விளையாட இருக்கிறது.
ஆசியக் கோப்பைத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தானில், பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகளுக்கு எதிரான போட்டியின் மூலமாகத் தொடங்குகிறது.