
இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் அவ்வப்போது கிரிக்கெட்டில் நடக்கும் தருணங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படையாக அறிவிக்கக் கூடியவர். அந்த வகையில் தற்போது நேற்று நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கான போட்டிக்கு பிறகு சஞ்சு சாம்சனின் ஆட்டம் குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை பத்து டி20 மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடர்களில் எப்போதுமே ஆரம்ப போட்டிகளில் சிறப்பாக விளையாடி பின்னர் சொதப்பக்கூடியவர்.
இந்நிலையில் இவர் தனது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு காரணம் என்ன என்பது குறித்து தற்போது சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சஞ்சு சாம்சனின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணம் அவரது தவறான ஷார்ட் செலக்சன் மட்டும்தான்.