
'Sanju Samson is always unfairly treated', Fans slam Team India (Image Source: Google)
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி மழை காரணமாக ரத்தான நிலையில், இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான டாஸை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
இந்த பிட்சில் முதலில் பேட்டிங் செய்யும் அணிதான் அனைத்து முறையும் வென்றுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறவில்லை. டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கு முன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக பினிஷராகவும் செயல்பட்டார்.