ஐபிஎல் 2025: தோனி, சூர்யா சாதனையை முறியடிப்பாரா சஞ்சு சாம்சன்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் தொடங்கி சில தினங்களே ஆன நிலையில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் ராஜஸ்தான் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும், கேகேஆர் அணி ஆர்சிபி அணிக்கு எதிரான தோல்விக்கு பின்னரும் என இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டன் சஞ்சு சாம்சன் சில சாதனைகள் படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Trending
தோனியை முந்தும் வாய்ப்பு
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 23 ரன்களை அடிக்கும் பட்சத்தில், இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். மகேந்திர சிங் தோனி இதுவரை 392 போட்டிகளில் விளையாடி 7432 ரன்களுடன் எட்டாம் இடத்தில் உள்ளார். சஞ்சு சாம்சன் 296 டி20 போட்டிகளில் 283 இன்னிங்ஸ்களில் 7410 ரன்கள் எடுத்துள்ளார்.
சூர்யகுமார் யாதவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு.
இதுதவிர்த்து இப்போட்டியில் சஞ்சு சாம்சன் 3 சிக்ஸர்கள் அடித்தால், இந்தியாவுக்காக டி20 அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சூர்ய குமார் யாதவை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிப்பார். டி20 போட்டிகளில் சஞ்சு இதுவரை 341 சிக்ஸர்களையும், சூர்யகுமார் 343 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 525 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 419 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில்..
இந்த சீசனின் முதல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் அதிரடியான ஒரு இன்னிங்ஸை விளையாடி இருந்தார். அப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். இருப்பினும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத அவர் தற்போது இம்பேக்ட் வீரராக மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், நிதிஷ் ராணா, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.
Win Big, Make Your Cricket Tales Now