
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கில் மற்றும் இசான் கிஷான் இருவரும் அரை சதங்கள் அடித்து அபாரமான துவக்கம் தந்தார்கள். இந்த ஜோடி 143 ரன்கள் சேர்த்தது.
இதற்கு அடுத்து இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கும் நான்காவது இடத்தில் வந்த சஞ்சு சாம்சன், இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் இருந்த நம்பிக்கையை அப்படியே சீர்குலைத்தார். உள்ளே நுழைந்ததும் அவரது பேட்டில் இருந்து பந்துகள் அவ்வளவு துல்லியமாக சிக்ஸர்களுக்கு பறந்தன. அவருடைய ஷாட் ஒவ்வொன்றும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தன.
அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு நேற்று அவர் அடித்த 51 ரன்களிலேயே எல்லா பதிலையும் சொல்லிவிட்டார். கில் உடன் சேர்த்த 69 ரன் பார்ட்னர்ஷிப்பில் சாம்சன் எடுத்த ரன்கள் மட்டும் 51. அணியில் தனக்கான இடத்தைப் பற்றி கவலைப்படாமல், களத்தில் உள்ளே வந்து என்ன தேவையோ? அதை மிக தைரியமாக செய்தார்.