
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று சண்டிகரில் நடைபெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 50 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் புள்ளிப்பட்டியலிலும் 6ஆம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் தோல்வியையே தழுவாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன் எனும் மறைந்த ஷேன் வார்னேவின் சாதனையை சஞ்சு சாம்சன் முறியடித்து அசத்தியுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய ஜாம்பவன ஷேன் வார்னே ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டனாக 31 வெற்றிகளை பதிவுசெய்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்சமயம் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக 32 வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், இந்த பட்டியலிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.