
Sanju Samson To Captain India A Side For ODI Series Against New Zealand A (Image Source: Google)
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணியுடன் விளையாடிவருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள்(4 நாள் டெஸ்ட்) கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகள் டிராவாகின. 3ஆவது டெஸ்ட் நடந்துவருகிறது.
இதைத்தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் நடக்கவுள்ளன. 3 ஒருநாள் போட்டிகள் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்களே கூட, சஞ்சு சாம்சனுக்காக குரல் கொடுத்தனர்.