
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அவருக்கு முன்பாக அனைத்து அணிகளும் தேவையான வீரர்களை தக்க வைத்து தேவையற்ற வீரர்களை கழற்றி விட்டுள்ளது. அது போக குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை கடைசி நேரத்தில் மும்பை வாங்கியது போல சில முக்கிய வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கிய நிகழ்வுகளும் அரங்கேறியது.
அந்த வரிசையில் 5 கோப்பைகளை வென்று நடப்பு சாம்பியனாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் 16.25 கோடிக்கு வாங்கப்பட்ட இங்கிலாந்தின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவித்தது. அதை விட சென்னை வெளியிட்ட தக்க வைத்த வீரர்களின் பட்டியலில் தோனி முதல் வீரராக இடம் பிடித்தது ரசிகர்களின் மகிழ்ச்சியடைய வைத்தது.
ஏனெனில் 2008 முதல் சென்னை அணிக்காக விளையாடி வரும் அவர் கடந்த சீசனில் முழங்கால் வலியுடன் விளையாடியதால் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் தற்போது 41 வயதை கடந்துள்ள அவர் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு குணமடைந்து வருவதால் மீண்டும் விளையாடுவார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.