
‘Sanju Samson wasting good form, opportunities to press for India recall’: Ian Bishop (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் 21 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ஹசரங்காவின் முதல் ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரி அடித்த சாம்சன், ஹசரங்காவின் 2-வது ஓவரில் ரிவர்ஸ் சுவிப் அடிக்க முயன்ற போது பந்து பேட்டில் படவில்லை. அடுத்த பந்தும் அதே போல அடிக்க முயன்ற போது போல்ட் ஆனார்.
இந்நிலையில் சாம்சன் அவரது திறமையை வீணடிக்கிறார் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் இயன் பிஷப் கூறியுள்ளார்.