பிராட்மேன் வரிசையில் இடம்பிடித்த சர்ஃப்ராஸ் கான்!
முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர் சர்ஃப்ராஸ் கான் இடம்பிடித்துள்ளார்.
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவிலுள்ள எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிச்சுற்றில் மும்பை - மத்தியப் பிரதேச அணிகள் மோதி வருகின்றன.
இதில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜெயிஸ்வால் 78, சர்ஃபராஸ் கான் 134 ரன்கள் எடுத்தார்கள். மத்திய பிரதேச அணி தரப்பில் கெளரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Trending
இதையடுத்து களமிறங்கியுள்ள மத்திய பிரதேச அணி யாஷ் தூபே, ஷுபம் சர்மா ஆகியோரது அதிரடியான சதத்தினால், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு முதல் இன்னிங்ஸில் 368 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்நிலையில் இந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 937 ரன்கள் எடுத்துள்ளார் சர்ஃபராஸ் கான். இதற்கு முன்பு 2019-20 ரஞ்சி கோப்பைப் போட்டியிலும் 900+ ரன்கள் எடுத்தார். ரஞ்சி கோப்பை வரலாற்றில் சர்ஃபராஸ் கான் உள்பட இதுவரை 3 பேட்டர் மட்டுமே இருமுறை 900 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள்.
முதல்தர கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 2000+ ரன்கள் எடுத்த வீரர்களில் அதிக பேட்டிங் சராசரி கொண்டவராக பிராட்மேன் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் சர்ஃபராஸ் கான். 25 ஆட்டங்களில் 2,485 ரன்களுடன் 82.83 சராசரி ரன்கள் வைத்துள்ளார். பிராட்மேனின் சராசரி - 95.14.
முதல்தர கிரிக்கெட்டில் அதிக பேட்டிங் சராசரி (குறைந்தது 2000 ரன்கள்)
- பிராட்மேன் - 234 ஆட்டங்கள் - 28,067 ரன்கள் - 95.14 சராசரி
- சர்ஃபராஸ் கான் - 25 ஆட்டங்கள் - 2,485 ரன்கள் - 82.83 சராசரி
- விஜய் மெர்சண்ட் - 150 ஆட்டங்கள் - 13,470 ரன்கள் - 71.64 சராசரி
Win Big, Make Your Cricket Tales Now