
ரஞ்சிக் கோப்பை இறுதிப் போட்டி மும்பை - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த போதிலும் சர்பராஸ் கானின் சதம் மற்றும் ஜெய்ஸ்வாலின் அரைசதத்தின் உதவியுடன் 374 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய மத்தியப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 586 ரன்களை விளாசி அசத்தியது. இதில் யாஷ் தூபே, ஷுபம் சர்மா, ராஜத் பட்டித்தார் ஆகியோர் சதம் விளாசினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய மும்பை அணியால் 269 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து 108 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றதுடன், ரஞ்சி கோப்பை தொடரில் முதல் முறையாக கோப்பையையும் வென்று அசத்தியது.