
SAvsPAK: Pakistan win a thriller in 1st t20I against South Africa (Image Source: Google)
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் டி20 போட்டி ஜஹென்னஸ்பர்கில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி களமிறங்கிய ஐய்டன் மார்க்ரம் - மாலன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
பின்னர் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாலன் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்க்ரம் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹென்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.