
SAW vs WIW 3rd ODI: Laura Wolvaardt ton helsp SA womens post a total on 299/8 (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி ஜொஹனன்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டஸிம் பிரிட்ஸ், அன்னே போஷ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.