
Scotland vs Australia 2nd T20I Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் தொடரை வெல்லும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடவுள்ளது. அதேசமயம் தோல்வியில் இருந்து மீளும் முயற்சியில் ஸ்காட்லாந்து அணியும் செயல்படும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SCO vs AUS 2nd T20I : போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப், எடின்பர்க்
- நேரம் - செப்டம்பர் 06, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)
SCO vs AUS 2nd T20I: Pitch Report