
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை நிர்ணயம் செய்யும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக், டெம்பா பவுமா, ஐடன் மார்க்ரம் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 102 ரன்களையும், குயின்டன் டி காக் 82 ரன்களையும், கேப்டன் டெம்பா பவுமா 57 ரன்களையும் சேர்த்து அசத்தினர்.