
அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் போட்டியில் சியாட்டில் ஆஸ்கர்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சியாட்டில் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
இதையடுத்து களமிறங்கிய வாஷிங்டன் அணிக்கு மேத்யூ ஷார்ட் -ஆண்ட்ரிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மேத்யூ ஷார்ட் 2 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகதார் அஹ்மதும் 5 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஆண்ட்ரிஸ் 28 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 20 ரன்களுக்கும், ஹென்றிக்ஸ் 24 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் அகீல் ஹொசைன் அதிரடியாக விளையாடி 33 ரன்களைச் சேர்த்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரகளைச் சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் வெய்ன் பார்னெல், ஹர்மீட் சிங் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.