
எஸ்ஏ20 2024 இறுதிப்போட்டி: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - போட்டி முன்னோட்டம் (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இன்றுடன் முடிவடைகிறது. இதில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடவுள்ளது. இதில் சன்ரைசர்ஸ் அணி ஏற்கெனவே முதல் சீசனில் கோப்பையை வென்று அசத்தியதைப் போன்று, இரண்டாவது முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆவலுடன் உள்ளது. அதேசமயம் நடப்பு சீசனில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வரும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ்
- இடம் - நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்