
Sunrisers Eastern Cape vs Joburg Super Kings Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி விளையாடிய 6 போட்டிகளில் மூன்று வெற்றி, மூன்று தோல்வி என 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி அணி 5 போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வி, இரண்டு முடிவில்லை என 10 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
SEC vs JSK, SA20 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
- இடம் - செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானம், கெபெர்ஹா
- நேரம் - ஜனவரி 24, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)