வெளிநாட்டில் ஐபிஎல் தொடர்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தேர்தல் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி போட்டிகளை துபாயியில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதால் இத்தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடுவது தாமதம் ஏற்பட்டிருந்தது.
Trending
அதன் காரணமாக இத்தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையை மட்டும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலைய்ல் பொதுத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. இதனால் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி இந்தியாவில் நடைபெறுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
இந்நிலையில், தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்த பின்னர் ஐபிஎல் தொடரின் 2ஆவது பாதி ஆட்டத்தை இந்தியாவில் நடத்தலாமா அல்லது துபாயில் நடத்தலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கரோனா தொற்று காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now