
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஹால் ஆஃப் ஃபேம் விருதுக்கு இந்த ஆண்டு இரண்டு இந்தியர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்களை ஹால் ஆஃப் ஃபேம் என்ற பட்டத்தை வழங்கி கௌரவிக்கும்.
அந்த வகையில் இம்முறை இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் சேவாவிற்கு அந்த கௌரவம் கிடைத்திருக்கிறது. இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒரு நாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள சேவாக் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையும் கைப்பற்றி இருக்கிறார்.
டெஸ்டில் 8,586 ரன்களும், 23 சதங்களும் அதில் இரண்டு முச்சதங்களும் அடங்கும். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேவாக் 219 ரன்களை குவித்திருக்கிறார். தமக்கு வழங்கப்பட்டிருக்கும் கௌரவம் குறித்து பேசி உள்ள சேவாக், “தமக்கு இந்த பட்டத்தை வழங்கிய ஐசிசிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் கிரிக்கெட் பந்தை அடிப்பதை தான் என் காதலாக நான் பார்த்து வந்தேன். அதற்கு நான் நன்றியுடன் இருக்கின்றேன்” என்று சேவாக் கூறியுள்ளார்.