
ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறவுள்ள எலிமினேஷன் 2 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி, ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்த்து விளையாடும்.
ராஜஸ்தான் அணி, குவாலிஃபையர் 1 ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. ஆர்சிபி அணி எலிமினேஷன் 1 ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை அசால்ட்டாக வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு வந்துள்ளது. இப்போட்டியில் வெற்றிபெற்றால் இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்றால், இரண்டு அணிகளும் வெற்றிக்கு தீவிரமாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அணி முழுக்க முழுக்க பட்லரை நம்பியிருப்பதுபோல் ஆர்சிபி கிடையாது. அந்த அணியில் மேக்ஸ்வெல், ஹர்ஷல் படேல், தினேஷ் கார்த்திக், ராஜத் படிதர் போன்ற பல மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். கடந்த போட்டியில் கூட டூ பிளெசிஸ், கோலி ஆகியோர் சொதப்பிய நிலையில் படிதர் அபாரமாக விளையாடி சதம் விளாசி மேட்ச் வின்னராக இருந்தார். மேலும் ஹர்ஷல் படேலும் தனது பங்கிற்கு சிறப்பாக பந்துவீசி 25/1 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.