
நேற்று பிளே ஆப் வாய்ப்புக்கான முக்கிய போட்டியில் ஐபிஎல் தொடரில் பஞ்சாப், டெல்லியை எதிர்த்து தர்மசாலாவில் விளையாடிய போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இதில் டாஸை இழந்து முதலில் விளையாடிய டெல்லி அணிக்கு கேப்டன் வார்னர், ப்ரீத்திவி ஷா, ரைலி ரூசோ ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வழங்க 20 ஓவர்களில் 213 ரன்கள் கிடைத்தது.
தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் அணிக்கு லிவிங்ஸ்டன் அதிரடியான ஆட்டத்தை ஒரு முனையில் வெளிப்படுத்தினார். இன்னொரு முனையில் இளம் வீரர் அதர்வா டைடே அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்தார். சிறப்பாக ஒத்துழைப்பு தந்து விளையாடிவந்த அதர்வா டைடே 42 பந்தில் 55 ரன்கள் எடுத்திருந்த பொழுது 16ஆவது ஓவருக்கு முன்பாக அவர் ரிட்டையர்டு அவுட் முறையில் உள்ளே அழைக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக ஜித்தேஷ் சர்மா களத்திற்கு வந்தார். ஆனால் அவர் ஒரு ரன்னக்கூட அடிக்காமல் டக் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி இறுதிவரை போராடியும் வெற்றியை ஈட்டவில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி நடுவில் எடுத்த இந்த தவறான முடிவால் அவர்கள் தோல்வியை தழுவி விட்டார்கள் என்று தவான் கேப்டன்ஷிப்பை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.