Advertisement

யுஸ்வேந்திர சஹாலிற்கு வார்னிங் கொடுத்த தேர்வு குழு உறுப்பினர்!

யுஸ்வேந்திர சஹலின் பந்துவீச்சு குறித்து தேர்வுக்குழு உறுப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Selection committee member gave warning to Yuzvendra Chahal!
Selection committee member gave warning to Yuzvendra Chahal! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 28, 2022 • 01:31 PM

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்திய அணி சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று முதல் போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 28, 2022 • 01:31 PM

இத்தொடரில் இந்திய பௌலர்களில் அக்சர் படேலை தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. பும்ரா, புவி, ஹர்ஷல் படேல், சஹல் என அனைவரும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பினார்கள். இதில் சஹலின் பந்துவீச்சுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. முழுக்க முழுக்க பந்துவீச்சிற்காக மட்டுமே இவர் எடுக்கப்பட்டுள்ளார். 

Trending

ஐபிஎல் 15ஆவது சீசனில் அபாரமாக பந்துவீசியதால்தான் மீண்டும் இந்திய அணியில் ரெகுலராக இடம்பெற்று வருகிறார். இந்நிலையில் சஹல் சமீப காலமாகவே சிறப்பாக செயல்படாததால் மிடில் ஓவர்களில் இந்திய அணி விக்கெட்களை வீழ்த்த தடுமாறி வருகிறது. சஹல் ஓவர்களில் சுலபமாக ரன்கள் கசிகிறது.

இந்நிலையில் சஹலின் பந்துவீச்சு குறித்து தேர்வுக்குழு உறுப்பினர் அதிருப்தியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சஹல் ஐபிஎல் 15ஆவது சீசனின்போது வேகத்தை குறைத்து சரியான லெந்த், லைனில் பந்துவீசினார். மேலும், அதிகளவில் கூகுளிகளையும் துல்லியமாக வீசினார். ஆனால், சமீப காலமாக வேகம் குறைந்த பந்துகளை வீசுவதில்லை. மேலும், பந்துகளை அதிக நேரம் காற்றிலேயே இருக்க விடுகிறார். இதனால், பேட்டர்கள் பிரச்சினையில்லாமல் சஹலை வெளுத்து வாங்குகின்றனர்.

மேலும் கூகுளிகளையும் சஹல் குறைவான அளவிலேயே வீசுகிறார். இதற்கு காரணம், கூகுளிகளை அவரால் சரியான லெந்த், லைனில் வீச முடியவில்லை. இதுதான் சஹலின் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. இதனை தேர்வுக்குழு உறுப்பினர் சஹலிடம் நேரடியாகவே தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இன்றைய தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 போட்டியிலேயே சஹல் இந்த தவறை சரிசெய்ய வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை சஹல் இன்றும் சொதப்பினால், அடுத்தடுத்த போட்டிகளில் ரவி பிஷ்னோய்தான் களமிறக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement